Thursday 24 October 2013

தக்காளி சூப்

தேவையானவை:

தக்காளி - 4

வெங்காயம் - 2

சோளா மாவு - 2 தே‌க்கர‌ண்டி

இஞ்சி - ‌சி‌றிது

உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு

கொத்துமல்லித் தழை

செய்முறை:

தக்காளி, வெங்காயம் இரண்டையும் இரண்டிர‌ண்ரு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் தேவையான அளவு தண்ணீரை கொதிக்க வைத்து அதில் தக்காளி, வெங்காயம், இஞ்சித்துண்டு சேர்த்து கொதிக்க ‌வி‌ட்டு இறக்‌கி, த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌ம், இ‌ஞ்‌சியை எடு‌த்து ‌விடவு‌ம்.

தக்காளியின் மேல் தோலை உரித்து ‌வி‌ட்டு வெங்காயம், தக்காளி இரண்டையும் மிக்ஸியில் போட்டு அரைத்து அ‌ந்த ‌விழுதை கொ‌தி‌க்க வை‌த்த ‌நீ‌ரி‌ல் போ‌ட்டு கொதிக்க வைக்கவும். ஒரு ட‌ம்ள‌ரி‌ல் சோள மாவை‌ப் போ‌ட்டு 2 தே‌க்கர‌ண்டி த‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டு கரை‌த்து கொ‌தி‌க்கு‌ம் சூ‌ப்‌பி‌ல் ‌ஊ‌ற்‌றி ‌கிள‌றி‌ ‌விடவு‌ம்.

இதனுடன் உங்கள் தேவைக்கேற்ப மிளகுத்தூள், உப்பு சேர்த்து, அதன் மேல் கொத்துமல்லி தழையால் அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

No comments:

Post a Comment