Sunday 20 October 2013

பட்டாணி சாத‌ம்

தேவையானவை:

பச்சை பட்டாணி - 1 க‌ப்

தேங்காய் பால் - 1 க‌ப்

பாஸ்மதி அரிசி - 1 ஆழா‌க்கு

ப‌ச்சை ‌மிளகா‌ய் - 3

வெ‌ங்காய‌ம் - 2

கொத்தமல்லி, பு‌‌தினா - ‌சி‌றிது

எ‌ண்ணெ‌ய் - 3 தே‌க்கர‌ண்டி

சோ‌ம்பு, ஏலக்காய், ப‌ட்டை, ‌பி‌ரியா‌ணி இலை - தா‌ளி‌க்க, உப்பு - ‌சி‌றிது

செய்முறை:

பச்சை பட்டாணியை வேக வைக்கவும். பாஸ்மதி அரிசியைக் கழுவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். வெ‌ங்காய‌த்தை பொடியாக நறு‌க்கவு‌ம், ப‌ச்சை ‌மிளகாயை ‌கீ‌றி வை‌‌க்கவு‌ம்.

கு‌க்க‌ரி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி சோ‌ம்பு, பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றை போ‌ட்டு‌த் தா‌ளி‌த்து அ‌தி‌ல் வெ‌ங்காய‌‌ம், ப‌ச்சை ‌மிளகாயை‌ப் போ‌ட்டு வத‌க்கவு‌ம்.  அதில் அரிசியை சேர்த்து ‌கிள‌றி‌விடவு‌ம். ‌பிறகு, தேங்காய் பாலைச் சேர்க்கவும். பச்சை பட்டாணி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி மூடி ‌விடவும்.

2 ‌வி‌சி‌ல் வை‌த்து இற‌க்‌கி, கொ‌த்தும‌ல்‌லி, பு‌தினா சே‌ர்‌த்து ப‌ரிமாறவு‌ம்.

No comments:

Post a Comment