Friday 25 October 2013

வீட்டு மருத்துவம்

உட‌ல் நல‌த்தை‌ப் பே‌ணி‌‌க் கா‌க்க ‌வீ‌ட்டிலேயே மரு‌ந்து உ‌ள்ளது. அதனை ச‌ரியாக‌ப் பய‌ன்படு‌த்‌தினா‌ல் எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படாம‌ல் ந‌ல்ல பலனை‌த் தரு‌ம். கால்களில் ஏற்படும் பித்த வெடிப்பை சரி செய்ய எத்தனையோ பூச்சுக்களை வாங்கி பூசி இருப்பீர்கள்.

ஆனால் கை வைத்தியமாக, துவரம் பருப்பு 1 தேக்கரண்டி, ஒரு கைப்பிடி மருதாணி இலை ஆகியவற்றை தயிரில் ஊறவைத்து அரைத்து இரவில் தூங்கச் செல்வதற்கு முன் பாதத்தில் பத்து போன்று பூசி விடுங்கள். உங்கள் பாதம் எவ்வளவு மிருதுவானது என்று அப்போது உங்களுக்குத் தெரியும்.

குளிர் காலங்களில் தோலில் ஏற்படும் வறட்சியை சமாளிக்கவும் இங்கு வழி உள்ளது. எளிதுதான். செய்து பாருங்கள் நல்ல பலன் கிட்டும். துவரம் பருப்பை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து அதனுடன் வெந்நீர் சேர்த்து வறட்சியான இடங்களில் தேய்த்து வந்தால் தோல் பளிச்சென மின்னும்.

தலை முடியை நரையில் இருந்து காத்து, பொடுகை போக்க ஒரு எளிதான வழி இருக்கிறது. அதாவது, உங்களுக்குத் தேவையான அளவிற்கு தேங்காய் எண்ணெயை அடுப்பில் வைத்து சூடாக்குங்கள்.

No comments:

Post a Comment