Tuesday 15 October 2013

தூ‌க்க‌ம் அவ‌சிய‌ம்

மூளை மற்றும் உடலின் தசைகள், இணைப்பு மூட்டுகள் தனது திறனை புதுப்பித்துக் கொள்ள தூக்கம் அவசியம் தேவை. எனவே தினமும் குறைந்தது 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்கி ஓய்வு எடுக்க வேண்டும்.

படுக்கை அறையில் டிவி, ரேடியோ போன்று அமைதியை கெடுப்பவை இருக்கக் கூடாது.

பாட்டுக் கேட்டுக் கொண்டே தூங்குவது சரியான முறை அல்ல. அந்த பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.

தூக்கத்திற்கு இருட்டு மிகவும் அவசியம். எனவே படுக்கை அறையில் வெளிச்சம் குறைந்த விளக்குகளை பயன்படுத்தலாம்.

கோடை காலம் என்பதால் அனல் காற்று வீசும். அதனைப் போக்க, ஜன்னல்களில் தண்ணீரில் நனைத்த துணியை கட்டிவிடுங்கள். சில்லென்று இதமாக இருக்கும் காற்று.

No comments:

Post a Comment