Wednesday 23 October 2013

பாகு‌ கா‌ய்‌ச்சு‌ம் போது

ச‌ர்‌க்கரை‌ப் பாகு காய்ச்சும் போது, கொதிக்கும் பாகில் சிறிது பால் விட்டுக் கலக்கினால், பாகில் உள்ள அழுக்கு மொத்தமும் திரண்டும் மேலே வரும். அவற்றை எளிதாக கரண்டியால் வழித்து எடுத்து விடலாம்.

வெ‌ல்ல‌ப் பாகு செ‌ய்யு‌ம் போது முத‌லி‌ல் வெ‌ல்ல‌த்தை ‌நீ‌ரி‌ல் கரை‌த்து வடி‌க‌ட்டி‌வி‌ட்டு பாகு செ‌ய்யு‌ங்க‌ள். இதனா‌ல் வெ‌ல்ல‌த்‌தி‌‌ல் இரு‌க்கு‌ம் துக‌ள்க‌ள் வெ‌ளியே‌றி‌விடு‌ம்.

அ‌திரச‌த்‌தி‌ற்கு பாகு செ‌ய்யு‌ம்போது, ஒரு ‌கி‌ண்ண‌த்‌தி‌ல் த‌ண்‌ணீ‌ர் எடு‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். பாகை ஒரு சொ‌ட்டு த‌ண்‌ணீ‌ரி‌ல் ‌விடு‌ங்க‌ள். பாகு கரை‌ந்து போனா‌ல் மேலு‌ம் கா‌ய்‌ச்சு‌ங்க‌ள்.

பாகு த‌ண்‌ணீ‌ரி‌ல் போ‌ட்டது‌ம் உரு‌ண்டு இரு‌ந்தா‌ல் மாவை சே‌ர்‌ப்பத‌‌ற்கு ச‌ரியான பதமாகு‌ம்.

No comments:

Post a Comment