Saturday 19 October 2013

மா‌ங்கா‌ய் பரு‌ப்பு

தேவையானவை:

ப‌‌யி‌த்த‌ம் பரு‌ப்பு - 1 க‌‌ப்

மா‌ங்கா‌ய் - 1 (‌சி‌றியது)

ப‌ச்சை ‌மிளகா‌ய் - 2

வெ‌ங்காய‌ம் - 1, பூ‌ண்டு - 10 ப‌ல்லு

தா‌ளி‌க்க - எ‌ண்ணெ‌ய், கடுகு, கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய் , ம‌ஞ்ச‌ள் தூ‌ள் - ‌சி‌றிது

உ‌ப்பு - தேவையான அளவு

செ‌ய்யு‌ம் முறை

ப‌யி‌‌த்த‌ம் பரு‌ப்பை கழு‌வி நறு‌க்‌கிய வெ‌ங்காய‌ம், ப‌ச்சை ‌மிளகா‌ய், தோ‌ல் உ‌ரி‌த்த பூ‌ண்டை சே‌ர்‌த்து வேக ‌விடவு‌ம்.  மா‌ங்காயை‌க் கழு‌வி தோ‌ல் ‌நீ‌க்‌கி பொடியாக நறு‌க்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

பரு‌ப்பு ந‌ன்கு வெ‌ந்தது‌ம் மா‌ங்காயை‌ப் போ‌ட்டு ‌கிளறவு‌ம். மா‌ங்கா‌ய் ந‌ன்கு வெ‌ந்தது‌ம் தேவையான அளவு உ‌ப்பு, ம‌ஞ்ச‌ள் தூ‌ள் சே‌ர்‌த்து ‌சி‌றிது நேர‌ம் வேக ‌விடவு‌ம். பரு‌ப்பு குழைந்து வ‌ந்தது‌ம் வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி கடுகு, ‌மிளகா‌ய் போ‌ட்டு தா‌ளி‌த்து‌ பரு‌ப்‌பி‌ல் கொ‌ட்டி‌க் ‌கிளறவு‌ம்.

வெறு‌ம் பரு‌ப்பு சாத‌ம் செ‌ய்வத‌ற்கு ப‌திலாக பு‌ளி‌ப்பு சுவை‌ப் ‌பிடி‌த்தவ‌ர்க‌ள் த‌ற்போது மா‌ங்கா‌ய் ‌சீச‌ன் இரு‌ப்பதா‌ல் மா‌ங்கா‌ய் போ‌ட்டு பரு‌ப்பு செ‌ய்யலா‌ம்

No comments:

Post a Comment