Thursday 28 November 2013

சமைய‌லி‌ல் சேரு‌ம் வே‌ண்டாத பொரு‌ட்க‌ள்

தேங்காய் துருவும்போது ஓட்டு சத்தம் கேட்கும் வரையில் துருவக்கூடாது. தேங்காய் ஓட்டுத்தூள் குடல் புண்களை ஏற்படுத்தும்.

எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளியை வத‌க்கு‌ம் போது ந‌ன்கு ‌தீய‌வி‌ட்டு ‌வத‌க்க‌க் கூடாது. பொ‌ன்‌னிறமாக ‌சிவ‌‌ந்தது‌ம் எடு‌த்து‌விட வே‌ண்டு‌ம். இதே‌ப்போல‌த்தா‌ன் எ‌ண்ணெ‌யி‌ல் பொ‌ரி‌க்கு‌ம் அனை‌த்து‌ப் பொரு‌‌ட்களையு‌ம் ‌தீயாம‌ல் சமை‌க்க வே‌ண்டு‌ம். ‌தீ‌ய்‌ந்த உணவு‌ப் பொரு‌ள், உட‌லி‌ல் பு‌ற்றுநோயை ஏ‌ற்படு‌த்து‌ம்.

அ‌ஜினமோ‌ட்டோ ‌நிறை‌ந்த உணவுகளை அ‌திக‌ம் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது. இதே‌ப்போல ஆ‌ப்ப சோடாவையு‌ம் ‌‌மிக‌க் குறை‌ந்த அள‌வி‌ற்கு‌த்தா‌ன் பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம். இர‌ண்டுமே வ‌யி‌ற்றை‌ப் பாழா‌க்‌கி‌விடு‌ம்.

ஒரே எ‌ண்ணையை ‌மீ‌ண்டு‌ம் ‌மீ‌ண்டு‌ம் பய‌ன்படு‌த்‌தி பொ‌ரி‌த்தெடு‌க்கு‌ம் ப‌ஜ்‌ஜி, வடை போ‌ன்ற உணவுகளை அடி‌க்கடி சா‌ப்‌பிட வே‌ண்டா‌ம். இது உட‌ல்‌நிலையை அ‌திக‌ம் பா‌தி‌க்கு‌ம்.

No comments:

Post a Comment