Friday 15 November 2013

சாம்பார் குறிப்புகள்

சாம்பாரில் முள்ளங்கியை பச்சையாக அறிந்து வேகவைக்காமல் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி பின்னர் சாம்பாரில் சேர்த்தால் சுவை கூடும். சளியும் பிடிக்காது.

வெங்காய சாம்பார் வைக்கும் போது, வதக்கலுக்கு பெரிய வெங்காயத்தையே பயன்படுத்தவும். சின்ன வெங்காயத்தை சாம்பாருக்கு அரைக்கும் மசாலாவுடன் அரைத்து சேர்க்கவும்.

பெரிய நெல்லிக்காய் சீசன் தற்போது. உடலுக்கு சத்தாணதும் கூட. காய்கறிகள் சேர்த்து வைக்கும் சாம்பாருடன் ஒரு பெரிய நெல்லிக்காயையும் சேர்த்து வைத்துப் பாருங்கள்.

கோடைக் காலம் என்பதால் துவரம் பருப்புடன் சிறிது வெந்தயத்தையும் கழுவி தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற விடவும். பின்னர் பருப்பை வேகவைத்து நீங்கள் செய்யும் முறையில் சாம்பார் வையுங்கள். வெந்தய சாம்பாருக்கு போட்டி போடுவார்கள்.தொடரும்.

No comments:

Post a Comment