Saturday 16 November 2013

சாம்பார் குறிப்புகள்

தொடர்ச்சி..

சாம்பார் பொடி அரைக்கும் போது அந்த கலவையுடன் சிறிது பொறிக்கடலை, புழுங்கல் அரிசியையும் சேர்த்து வறுத்து அரைத்துக் கொண்டால் சாம்பார் சுவைக்கும்.

கொத்துமல்லி காம்புகளை நல்ல நூலில் கட்டி சாம்பார் கொதிக்கும் போது போட்டு எடுத்து விடுங்கள். நல்ல மணமாக இருக்கும்.

காய்கறி இல்லாத சமயங்களில் வேர்க்கடலையை துவரம் பருப்புடன் வேகவைத்து சாம்பார் வைக்கலாம்.

சாம்பாருடன் சௌசௌ உள்ளே இருக்கும் கொட்டையை அரைத்து சேர்த்தால் தேங்காய் சேர்த்தது போன்ற சுவையைக் கொடுக்கும்.

துவரம் பருப்பை வேக வைக்கும் போது அத்துடன் சிறிது வெந்தயம் சேர்த்தால் சாம்பார் சீக்கிரம் கெட்டுப் போகாது.

No comments:

Post a Comment