Monday 18 November 2013

பொங்கல் மீந்துவிட்டதா..?

சாம்பார், ரசம் - இரவு உணவுக்காக சமைத்த சாம்பார் அல்லது ரசம் மீந்துவிட்டால், அதனை வடிகட்டி, கோதுமை மாவில் ஊற்றி பிசைந்தால் சுவையான, ருசியான மசாலா சப்பாத்தி ரெடி. பொங்கல் - மீதமுள்ள பொங்கலை சிறிதளவு அரிசி மாவுடன் பிசைந்து அந்த கலவையில் துருவிய கேரட், நறுக்கிய புதினா போன்றவற்றை சேர்த்து அடையாகவோ அல்லது சிறு வடைகளாகவோ சுட்டால் ருசியாக இருக்கும்

ச‌ர்‌க்கரை ‌பாகு - மைதா மா‌வி‌ல் ச‌ர்‌க்கரை ‌ஜீரா/ பாகை ஊ‌ற்‌றி கரை‌த்து இ‌னி‌ப்பு தோசை சு‌ட்டு‌க் கொடு‌க்கலா‌‌ம்.  சப்பாத்தி - சப்பாத்தி மீந்துவிட்டால், பிரிட்ஜில் வைப்பதால் அடுத்தநாள் மிகவும் கடினமாக ஆகிவிடும். இந்த சப்பாத்திகளை நீளவாக்கில் மெலிசாக வெட்டி, துருவிய காய்கறிகள், வெங்காயம், தக்காளி, தேவையான மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சப்பாத்தி நூடுல்ஸ் நொடியில் ரெடி

மோர் குழம்பு - மோர் குழம்பை வடிகட்டி அதனுடன் அரிசி மாவு, தேவையான அளவு உப்பு, சோடா மாவு சேர்த்து இரவு வைத்துவிட்டு காலையில் ஊத்தப்பம் செய்தால் சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment