Saturday 16 November 2013

பருப்பு போண்டா

தேவையானவை:

கடலைப்பருப்பு - அரை கப்

துவரம்பருப்பு - அரை கப்

உளுத்தம்பருப்பு - கால் கப்

பாசிப்பருப்பு - கால் கப்

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2, மல்லித்தழை - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

தேங்காய் துருவல் - கால் கப்

உப்பு - ருசிக்கேற்ப

எண்ணெய் - தேவைக்கு

பூண்டு - 5 பல்

சோம்பு - அரை டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் - 2

செய்முறை:

பருப்பு வகைகளை ஒரே பா‌த்‌திர‌த்‌தி‌ல் ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். ‌பி‌ன்ன‌ர் அ‌ம்‌மி‌யிலோ அ‌ல்லது ‌கிரை‌ண்ட‌ர், ‌மி‌க்‌சி‌யிலோ சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள்.

சோம்பு, மிளகாய் இரண்டையும் அரைத்து அதனுடன் சேருங்கள். வெங்காயம், மிளகாய், பூண்டு, மல்லி, கறிவேப்பிலை பொடியாக நறுக்கி சேருங்கள்.

தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து உருண்டைகளாக பொரித்தெடுங்கள்

No comments:

Post a Comment