Tuesday 26 November 2013

ரு‌சியான ஆ‌ம்லெ‌ட் தயா‌ரி‌க்க

ஆம்லெட் தயாரிக்கும்போது அதனுடன் சிறிதளவு பால் மற்றும் உளுத்தம் மாவு சேர்த்தால் ஆம்லெட் மொறுமொறுப்பாகவும் ருசியாகவும் இருக்கும்.

கோதுமை மாவை அரைக்கும்போது சோயாபீன்ஸை அதனுடன் சேர்த்தால் சப்பாத்தி ருசியாக இருப்பதுடன் ஊட்டச் சத்தும் அதிகரிக்கும்.

பாகற்காய், பப்பாளி போன்றவற்றை ஃப்ரிட்ஜில் வைத்தால் மஞ்சளாக மாறிவிடும் இதை தடுக்க அதனை பெரிய துண்டங்களாக நறுக்கி வைக்கலாம்.

ஊறுகாய்களை பாட்டில்களில் அடைக்கும் முன் பாட்டிலில் சிறிதளவு வினீகரை விட்டு நன்றாக குலுக்கினால் பாட்டிலின் உட்சுவர்களில் படியும் வினீகர் ஊறுகாய்களில் பூஞ்சக் காளான் பூப்பதைத் தடுக்கலாம்.

முள்ளங்கி வைத்த பரோட்டா தயாரிக்கும்போது, நறுக்கிய முள்ளங்கியை வறுத்து பிறகு உப்பை சேர்த்தால் முள்ளங்கியில் உள்ள நீர் வற்றாமல் பரோட்டாவை சுருட்ட சுலபமாக இருக்கும்.

No comments:

Post a Comment