Wednesday 6 November 2013

சரும பராமரிப்பு குறிப்புகள்

தினமும் மிதமான தண்ணீரில் குளிப்பது சருமத்தைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். உதட்டில் வெடிப்பு ஏற்படாமல் இருக்க பாலேடு அல்லது உப்பில்லாத வெண்ணெயைத் தடவி வரலாம்.

ஆலிவ் எண்ணெயில் சிறிதளவு சர்க்கரையைக் கலந்து, பழைய டூத்பிரஷ் உபயோகித்து உதட்டில் தேய்த்தால், உதட்டில் டெட் செல்கள் நீங்கி, வழவழப்பாகும். இது ஒரு சிறந்த லிப் ஸ்க்ரப் ஆகும்.

பாத்திரம் கழுவியவுடன், நகங்களில் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் தடவினால், நகங்கள் உடைவதைத் தவிர்க்கலாம்.

வெளியே சென்று வீடு திரும்பியவுடன், கால்களை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்து விட்டு, பின்னர் மாய்ஸ்சரைசரைத் தடவ வேண்டும். கால்கள் புதுப்பொலிவு பெறும்.

குளித்தபின், சிறிதளவு க்ளிசரினுடன் பன்னீரைக் கலந்து கைகளில் தேய்த்தால், நாள் முழுவதும் கைகள் பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும். 

No comments:

Post a Comment