Sunday 17 November 2013

முக‌ப்பரு‌க்க‌ள் வராம‌ல் த‌வி‌ர்‌க்க...

பரம்பரை ரீதியாகவும் முகப் பருக்கள் தோன்றும். பெண்களுக்கு ஹார்மோன் சுரப்பின் மாற்றங்களால் முகப் பருக்கள் தோன்றுகின்றன. தோலின் மேல் பகுதியில் இருக்கும் கூடுதல் எ‌ண்ணெண‌ய்ப் பசை, தோலின் இறந்த செல்களுடன் கலந்து உருண்டையாக இருக்கும்.

இதில் பாக்டீரியா வளரும்போது எரிச்சல், வீக்கம், சீழ் ஏற்பட்டு கரும்புள்ளியாக மாறுகிறது. எ‌ண்ணெ‌ய் உணவுகள், இனிப்புகள் சாப்பிடுவதை தவிர்த்தால் முகப் பருக்களை குறைக்கலாம். ஆனால் ஒரேயடியாக நீக்க முடியாது.

உட‌ம்‌பி‌ல் பு‌ள்‌ளிகளா?

கை, முகம் மற்றும் முதுகுப் பகுதியில் பிரவுன் நிறத்தில் தோன்றும் கனமான புள்ளிகள் ஏஜ் ஸ்பாட் அல்லது லிவர் ஸ்பாட் என அழைக்கப்படுகிறது. மரபு வழி மற்றும் அதிகமாக வெயில் படுவதால் தோலில் அதிகமாக மெலானின் உற்பத்தியாவதால், லிவர் ஸ்பாட் ஏற்படுகிறது.

இதற்கு க்ரையோதெரபி எனப்படும் திரவ நைட்ரஜனை அந்த இடத்தில் தெளிக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. லேசர் சிகிச்சை மூலம் இதனை சரி செய்யலாம். 

No comments:

Post a Comment