Wednesday 27 November 2013

பீன்ஸ் பொரியல்

தேவையானவை:

பீன்ஸ் - 1/4 கிலோ
வெ‌ங்காய‌ம் - 1
கடுகு, ‌சீரக‌ம் - 1/2 தே‌க்கர‌ண்டி
எண்ணெய் - 2 தே‌க்கர‌ண்டி
‌ம‌ஞ்ச‌ள் தூ‌ள், உப்பு - தேவையான அளவு
கா‌ய்‌ந்த மிளகாய் - 3
உளுத்தம் பருப்பு - 1 தே‌க்கர‌ண்டி
தேங்காய்த் துருவல் - கா‌ல் க‌ப்

செ‌ய்யு‌ம் முறை:

பீன்ஸை இரு ப‌க்கமு‌ம் இரு‌‌க்கு‌ம் நாரை ‌கி‌ழி‌த்து‌வி‌ட்டு ந‌ன்கு கழு‌வி பொடிப் பொடியாக நறு‌க்‌கி‌‌க் கொள்ளவும்.

அடு‌ப்‌பி‌ல் வா‌ண‌லி வை‌த்து எ‌ண்ணெ‌‌ய் ஊ‌ற்‌றி கடுகு, ‌சீரக‌ம், கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய் போ‌ட்டு தா‌ளி‌த்து ‌சி‌றிது உளு‌த்த‌ம் பரு‌ப்பை போ‌ட்டு பொ‌ரி‌க்கவு‌ம். அ‌தி‌ல் வெ‌ங்காய‌ம் ம‌ற்று‌ம் ‌‌பீ‌ன்ஸை போ‌ட்டு வத‌க்கவு‌ம்.

‌பீ‌ன்‌ஸ் வத‌ங்கு‌ம்போது அ‌தி‌ல் தேவையான அளவு உ‌ப்பு, ம‌ஞ்ச‌ள் தூ‌ள் போ‌ட்டு ‌கிளறவு‌ம். ‌சி‌றிது த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி ‌‌பீ‌ன்‌ஸை வேக ‌வி‌டவு‌ம்.

இறு‌தியாக இற‌க்கு‌ம்போது தே‌ங்கா‌‌ய்‌த் துருவ‌ல் சே‌ர்‌த்து ‌கிள‌றி இற‌க்கவு‌ம்.

No comments:

Post a Comment