Saturday 23 November 2013

வாழைத்தண்டு கறி

தேவையானவை:

வாழைத்தண்டு - ஒரு அடி தண்டு

கடுகு - கால் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன்

வற்றல் மிளகாய் - இரண்டு

உப்பு - தேவையான அளவு

கறிவே‌ப்பிலை - ஒரு கொத்து

தேங்காய்த் துருவல் - ஒரு மூடி

பயத்தம் பருப்பு - இரண்டு கைப்பிடி அளவு

செய்முறை :

வாழைத் தண்டை மேல் புறமாக லேசாக சீவிவிட்டு, வட்ட வடிவில் துண்டுகளாக்கவும். பின்னர் நார் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய தண்டு கருத்துப் போகாமல் இருக்க, மோர் கலந்த நீரில் வாழைத் தண்டைப் போடலா‌ம். இ‌ல்லையெ‌ன்றா‌ல் சாதாரண த‌ண்‌ணீ‌ரி‌ல் போடலா‌ம்.

கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றல், கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்ததும் நறுக்கிய வாழைத் தண்டைப் பிழிந்து போடவும். 10 நிமிடம் ஊறவைத்த பயத்தம் பருப்பையும் அதோடு சேர்த்து மூடவும்.  பாதி வெந்ததும் உப்பை சேர்க்கவும். நன்கு வெந்ததும் தேங்காய்த் துருவலைப் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

(தேங்காய் எண்ணெயில் தாளித்தால் சுவை கூடுதலாக இருக்கும்)

No comments:

Post a Comment