Thursday 21 November 2013

காரட் வடை

தேவையானவை:

காரட் - 1/4 ‌கிலோ

துவரம் பருப்பு - 500 ‌கிலோ

பெரிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 5

கொத்த மல்லி இலை - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு, கரம் மாசால பவுடர்

எண்ணெய் - அரை ‌லி‌ட்ட‌ர்

இஞ்சி - ‌சிறு து‌ண்டு

செய்முறை:

துவரம் பருப்பை நன்றாக கழுவி 1/2 மணி நேரம் ஊறவை‌த்து மிக்ஸி அ‌ல்லது அ‌ம்‌மி‌யி‌ல் அரை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். காரட்டை சுத்தம் செய்து துருவியால் துருவி எடுக்க வேண்டும். பின் வெங்காயம், ப‌ச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, இஞ்சி ஆ‌கியவ‌ற்றை சுத்தம் செய்து பொடியாக நறு‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம்.

பின்னர் அரைத்த துவர‌ம் பரு‌ப்புட‌‌ன் துருவிய காரட், மற்றும் வெட்டி வைத்துள்ள வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, இஞ்சியையு‌ம், தேவையான அளவு உப்பு, கரம் மசாலா பவுடர், அதனுடன் காரத்துக்காக சிறிதளவு மிளகாய்த்தூள் தேவையெனில் சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். எல்லா பொருட்களும் நன்றாக கலந்தவுடன் காடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து கலவையை வட்டம் வட்டமாக தட்டி எண்ணெயில் போட்டு எடுத்தால் காரட் வடை தயார்.

No comments:

Post a Comment