Saturday 30 November 2013

ச‌த்தான தோசை‌க்கு

தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு, 50 கிராம் வேர்க்கடலை 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.

சில சமயங்களில் தோசை வார்க்கும்பொழுது எளிதில் வராமல் கிண்டிப்போகும். அப்போது தோசைக் கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக கல்முழுதுவம் அழுத்தி தேய்த்திவிட்டு பிறகு வார்த்தால் நன்றாக வரும்.

சமைத்த சாதம் மிஞ்சிப் போய்விட்டால், அதைப்போல் இரண்டு பங்கு தண்ணீரை கொதிக்க வைத்து அதில் பழைய சாதத்தை கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்பசை அகன்று புதிதாக சமைத்ததைப் போல் இருக்கும்.

வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

No comments:

Post a Comment