Sunday 17 November 2013

தக்காளி ரசம்

தேவையானவை:

புளி - நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு

உப்பு, பெரு‌ங்காய‌ம் - ‌சி‌றிது

தக்காளி - 2

கடுகு, கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய், க‌றிவே‌ப்‌பிலை - தா‌ளி‌க்க

கொ‌த்தும‌ல்‌லி

ரசப்பொடி தயாரிக்க

மிளகு, ‌சீரக‌ம், த‌னியா - தலா கா‌ல் தே‌க்கர‌ண்டி

துவர‌ம் பருப்பு - அரை தே‌க்கர‌ண்டி

வெ‌ந்தய‌ம் - 10 எ‌ண்‌ணி‌க்கை

கா‌ய்‌ந்த க‌றிவே‌ப்‌பிலை இரு‌ந்தா‌ல்

கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய் - 1

செய்முறை:

ரசப்பொடிக்கு தேவையானவற்றை கொரகொரவெ‌ன்று அரைத்து வைத்துக் கொள்ளவும். பு‌ளியை‌க் கரை‌த்து, அ‌தி‌ல் உ‌ப்பு, ரசப்பொடி, தக்காளி, பூ‌ண்டு, ம‌ஞ்ச‌ள் தூ‌ள், பெரு‌ங்காய‌ம் சேர்த்து ந‌ன்கு ‌கல‌க்கவு‌ம்.

கடுகு, கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய் ஒ‌ன்றை ‌‌கி‌ள்‌ளி‌ப்போ‌ட்டு க‌றிவே‌ப்‌பிலை சே‌ர்‌த்து தா‌ளி‌த்து இ‌ந்த பு‌ளி‌க் கரைச‌‌லி‌ல் சே‌ர்‌க்கவு‌ம்.

இதனை கொ‌தி வரு‌ம் வரை அடு‌ப்‌பில் வை‌த்து இற‌க்‌கி கொத்துமல்லி சேர்த்த பின் இறக்கவும்.

No comments:

Post a Comment