Monday 25 November 2013

கேரட் மோர்க் குழம்பு

தேவையானவை:
புளித்த தயிர் - 2 கப்

தேங்காய்த் துருவல் - 2 தே‌க்கர‌ண்டி

எண்ணெய் - 2 தே‌க்கர‌ண்டி

கேரட் - 2, சீரகம் - 1/2 தே‌க்கர‌ண்டி

வெந்தயம் - 1/2 தே‌க்கர‌ண்டி

கடுகு - 1/2 தே‌க்கர‌ண்டி

மஞ்சள் தூள் - சிறிதளவு

பெருங்காயத்தூள் - சிறிதளவு

ஊறவைத்த கடலைப்பருப்பு - 1 தே‌க்கர‌ண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை

கேரட்டைத் தோல் சீவி வில்லைகளாக நறுக்கவும். 3 நிமிடங்கள் மைக்ரோ `மைக்ரோ ஹை'யில் ஒரு மூடிய பாத்திரத்தில் சிறிது தண்ணீருடன் வைக்கவும்.

தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், பருப்பு, தயிர் ஆகியவற்றை மிக்சியில் போட்டு பெருங்காயத்தூள் கலந்து, 5 நிமிடங்கள் `மைக்ரோ ஹை'யில் வைக்கவும். கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டவும். வெந்த கேரட்டுக்குப் பதில், வெந்த சேப்பங்கிழங்கு, வெண்டைக்காய், பரங்கிக்காய் போன்றவைகளையும் சேர்த்து மோர்க் குழம்பு செய்யலாம்.

No comments:

Post a Comment