Tuesday 19 November 2013

தயிர் சட்னி

தேவையானவை:

தயிர் - 2 கப், பச்சை மிளகாய் - 2

வெங்காயம் - 1, கேரட் - 1

வெள்ளரிக்காய் - 1

தாளிக்க - கடுகு, சீரகம், கறிவேப்பிலை, உ பருப்பு, க பருப்பு.

அலங்கரிக்க - காய்ந்த மிளகாய், கொத்துமல்லி

எண்ணெய் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்யும் முறை:

தயிரை நீர் ஊற்றாமல் தேவையான அளவு உப்பு சேர்த்து கடைந்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

அதில் வெங்காயம், கேரட், வெள்ளரிக்காய், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி தயிரில் கலந்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் காய்ந்த மிளகாயை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றைப் போட்டு தாளித்து தயிரில் சேர்க்கவும்.

இறுதியாக வறுத்த மிளகாயையும், கொத்துமல்லியும் தூவி பரிமாறவும். தக்காளி சாதம், பிரிஞ்சி போன்றவற்றிற்கு அருமையாக இருக்கும்.

No comments:

Post a Comment