Wednesday 20 November 2013

வெஜ் ஸ்பிரிங் ரோல்

தேவையானவை:

கோஸ், கேர‌ட், ‌பீ‌ன்‌ஸ் - தலா 100 கிராம் (நறு‌க்‌கியது)

பட்டாணி - 1 கை‌ப்‌பிடி, மைதா - அரை கிலோ

இஞ்சி, பூண்டு விழுது - ‌சி‌றிது

வெண்ணெய் - 50 கிராம்

உ கிழங்கு, வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளி - தலா 2 நறுக்கியது

கரம்மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி

தூ‌ள்க‌ள் - தலா 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 1/2 கிலோ

செ‌ய்முறை:

மைதா‌வி‌ல் வெண்ணெய் சே‌ர்‌த்து உ‌ப்பு போ‌ட்டு தண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி ‌பிசைந்து வை‌க்கவு‌ம். குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, த‌க்கா‌ளி, கா‌ய்க‌றிக‌ள் போ‌ட்டு வத‌க்கவு‌ம். மிளகா‌ய், ம‌ஞ்ச‌ள் தூ‌ள், யஉ‌ப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி ‌சி‌‌றிது தண்ணிர் விட்டு 3 விசில் வைத்து இறக்கவும். ‌சி‌றிது மைதாவை கரை‌த்து பசை போல செ‌ய்யவு‌ம். பிசைந்து வைத்துள்ள மாவை புரிபோல் திரட்டி மசாலாவை நடுவிலே வைத்து உருட்டி ஓரங்களை மைதா பசையா‌ல் ஒ‌ட்டவு‌ம்.

கடாயில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் ஒவ்வொரு ரோல்களையும் போட்டு பொன்னிறமாக எடு‌‌த்து, லேசாக நறு‌க்‌கினா‌ல் வெஜ் ஸ்பிரிங் ரோல் தயா‌ர்.

No comments:

Post a Comment