Tuesday 26 November 2013

நெல்லிக்காய் ஊறுகாய்


தேவையானவை:

பெரிய நெல்லிக்காய் - 10
எலுமிச்சம்பழம் - 5
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1/4 கோப்பை
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

நெல்லிக்காயை சுத்தம் செய்து தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் வைத்து வேக வைக்கவும். நெல்லிக்காய் சூடு ஆறியதும், பல் பல்லாக உதிர்த்து கொட்டை நீக்கவும். அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், எலுமிச்சம்பழச் சாறு ஆகியவற்றைச் சேர்க்கவும். வெந்தயம், சீரகம் ஆகியவற்றை தனியே வறுத்து தூளாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, கடுகு சேர்த்து தாளித்து, அதனுடன் வெந்தயம் மற்றும் சீரகத்தூளைச் சேர்க்கவும். தாளித்த பொருட்களை ஆறவை‌த்து ஊறுகாயுடன் சேர்த்து ந‌ன்கு கல‌ந்து வை‌க்கவு‌ம்.

‌சின்ன நெல்லிக்காயைக் கொண்டும் இந்த ஊறுகாயை தயாரிக்கலாம். அப்படிச் செய்யும் போது உப்பு, மிளகாய் அளவை குறைத்துக் கொள்ளவும்.

No comments:

Post a Comment