Monday 2 December 2013

சமைய‌‌ல் ‌சிற‌க்க

சாதம் தயாரானதும் சுடச்சுட அதில் ஒரு தே‌க்கர‌ண்டி நெய் சேருங்கள். இது, சாதத்துக்கு ஓர் அருமையான மணம் கொடுக்கும்.

எலுமிச்சையிலிருந்து அதிகமான சாறைப் பெற அதை கையா‌ல் சமையல் மேடையில் நன்கு உருட்டித் தேயுங்கள். பின்னர் பிழியுங்கள்.

சோளத்தை அவிக்கு‌‌ம் போது அத‌ன் இனிப்பை வெளிக்கொண்டு வர சிறிது சர்க்கரையைச் சேருங்கள்.

சப்பாத்திக் கட்டையில் மாவு ஒட்டிக்கொள்ளாமல் இருக்க, மாவு தேய்ப்பதற்கு முன் சிறிதுநேரம் பிரீசரில் வைத்து எடுத்துப் பயன்படுத்துங்கள்.

கீரையை வேக வைக்கும்போது அதன் பசுமை நிறம் மாறாமலிருக்க ஆப்ப சோடா ஒரு சிட்டிகை போடவும். அல்லது கீரையை சமைப்பதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் சர்க்கரையைச் சேர்த்து சமைத்தால் கீரையின் பச்சை வண்ணம் மாறாமல் இருக்கும்

No comments:

Post a Comment