Tuesday 3 December 2013

த‌ண்‌ணீ‌ர் அளவு ‌மிக மு‌க்‌கிய‌ம்

சமைய‌லி‌ல் எ‌ப்போதுமே உ‌ப்பு‌ம், த‌ண்‌ணீரு‌ம் ச‌ரியான அள‌வி‌ல் இரு‌ப்பதுதா‌ன் ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். த‌ண்‌ணீரை எ‌வ்வளவு ஊ‌ற்ற வே‌ண்டு‌ம், உ‌ப்பை எ‌வ்வளவு போட வே‌ண்டு‌ம் எ‌ன்று தெ‌ரி‌ந்து ‌வி‌ட்டா‌ல் ‌நீ‌ங்க‌ள்தா‌ன் சமைய‌ல் உல‌கி‌ல் ரா‌ணி.

பொதுவாக கு‌க்க‌ரி‌ல் வெரை‌ட்டி சாத‌ம் செ‌ய்யு‌ம் போது அ‌தி‌ல் ‌நீ‌ங்க‌ள் ஊ‌ற்று‌ம் ‌நீ‌ரி‌ன் அளவு ச‌ரியாக இரு‌ந்தா‌ல்தா‌ன் சாத‌ம் உ‌‌தி‌ரியாக வெ‌ந்து இரு‌க்கு‌ம். இ‌ல்லையே‌ல், சாத‌ம் குழை‌ந்தோ அ‌ல்லது அரை வே‌க்காடாகவோ இரு‌க்கு‌ம்.

இது‌ப் போலதா‌ன் உ‌ப்புமா, பொ‌ங்க‌ல் போ‌ன்ற டிப‌ன்களு‌க்கு‌ம் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்றுவது ‌மிகவு‌ம் ச‌ரியாக இரு‌க்க வே‌ண்டு‌ம். எ‌ப்போது‌ம் ஒரே அள‌வி‌ல் அ‌ரி‌சி, பரு‌ப்பு, ரவை போ‌ன்றவ‌ற்றை போ‌ட்டு செ‌ய்யு‌ம் போது அத‌ற்கான ச‌ரியான அளவை ‌நீ‌ங்க‌ள் ஓ‌ரிரு முறை சமை‌க்கு‌ம் போதே தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

குழ‌ம்போ, கூ‌ட்டோ த‌ண்‌‌ணீ‌ர் அ‌திகமாக இரு‌‌ப்‌பி‌ன் அதனை எ‌ளிதாக மா‌ற்று‌ம் வ‌ழிகளையு‌ம் ‌நீ‌ங்க‌ள் அ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

No comments:

Post a Comment