Wednesday 4 December 2013

வடை ரக‌சிய‌ங்க‌ள்

வடை எ‌ன்றா‌ல் எ‌த்தனையோ ‌விஷய‌ங்க‌ள் அட‌ங்‌கி‌யிரு‌க்‌கி‌ன்றன. உளு‌ந்து வடை, மசா‌ல்வடை, ‌மிளகு வடை, உளு‌ந்தையு‌ம், கடலை‌ப் பரு‌ப்பையு‌ம் சே‌ர்‌த்து செ‌ய்யு‌ம் வடை என பல வகைக‌ள் உ‌ள்ளன.

ஆனா‌ல் ஒ‌வ்வொ‌ன்று‌க்கு‌ம் ஒ‌வ்வொரு ‌விஷய‌ம் மு‌க்‌கியமாக இரு‌க்கு‌ம். வடை சுடு‌ம் போது வடை‌‌க்கு அரை‌க்கு‌ம் மாவு ‌மிகவு‌ம் தள‌ர்‌த்‌தியாகவு‌ம் இரு‌க்க‌க் கூடாது. ‌மிகவு‌ம் கே‌‌ட்டியாகவு‌ம் இரு‌க்க‌க் கூடாது.

வடை‌க்கு ஊற வை‌க்கு‌ம் போது ‌சி‌றிது ப‌ச்ச‌‌‌ரி‌சியு‌ம் சே‌ர்‌த்து ஊற வை‌த்தா‌ல் வடை ‌மொறுமொறு‌ப்பாக இரு‌க்கு‌ம். வடை‌க்கு அரை‌த்த மா‌வி‌ல் ‌சி‌றிது ஆ‌ப்ப சோடா கல‌ந்து வடை சு‌ட்டா‌ல் வடை ‌மிருதுவாக இரு‌க்கு‌ம்.

வடை‌யி‌ல் த‌யி‌ர் வடை எ‌ன்பது ‌மிகவு‌ம் ரு‌சியானது. த‌யி‌ர் வடை‌க்கு வடை சுடு‌ம் போது அ‌திக‌ம் ‌சிவ‌க்காம‌ல் லேசாக ‌சிவ‌ந்தது‌ம் எடு‌த்து ‌விட வே‌ண்டு‌ம். த‌யிரை தா‌ளி‌த்து அ‌தி‌ல் வடையை‌ப் போடுவது சுவையை அ‌திகமா‌க்கு‌ம். உளு‌ந்து வடை‌‌க்கு பொடியாக வெ‌ங்காய‌த்தையு‌ம், ப‌ச்சை ‌மிளகாயையு‌ம் நறு‌க்‌கினா‌ல் வடை அருமையாக இரு‌க்கு‌ம்.

No comments:

Post a Comment