Wednesday 4 December 2013

வத‌க்க‌ல் ச‌ப்பா‌த்‌தி

தேவையானவை:

1 வெங்காயம், 1 தக்காளி

1 குடைமிளகாய், 1 துருவிய காரட்

கொத்தமல்லி ‌சி‌றிது, எண்ணெய் தா‌ளி‌க்க

உப்பு தேவையான அளவு

காரப்பொடி, காரம் மசாலா தேவையான அளவு

சீரகம் தா‌ளி‌க்க, ச‌ப்பா‌த்‌தி 4

செ‌ய்யு‌ம் முறை


இது ச‌ப்பா‌த்‌தி ‌மீ‌ந்து ‌வி‌ட்டா‌ல் எ‌ளிதாக‌ச் செ‌ய்யும் வத‌க்க‌ல் ‌ச‌ப்பா‌த்‌தி.

இர‌வி‌ல் செ‌ய்த சப்பாத்திகளை காலை‌யி‌ல் மீண்டும் தவாவில் போட்டு சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் தடவி சிவக்க எடுங்கள். பின் ‌சிறு ‌சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.

வா‌ண‌லி‌யி‌ல் எண்ணெய் சுட வைத்து, சீரகம் தாளித்து, வெங்காயம், இரு‌ந்தா‌ல் குடை ‌மிளகாயை‌ப் போட்டு வதக்கு‌ங்க‌ள்.

‌பி‌ன்ன‌ர் தக்காளி, உப்பு, ‌மிளகா‌ய் பொடி சேர்த்து வதக்கிய பின், சப்பாத்தித் துண்டுகளைப் போட்டு இறக்கி வைக்கவும்.

வே‌ண்டுமெ‌ன்றா‌ல் துருவிய காரட், கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். காலை உண‌வி‌ற்கு அச‌த்தலாக இரு‌க்கு‌ம்.

No comments:

Post a Comment