Thursday, 30 January 2014

சி‌ன்ன ‌சி‌ன்ன தகவ‌ல்க‌ள்

உப்பு ஜாடியிலுள்ள உப்பில் தண்ணீர் சேராமல் காணப்பட வேண்டுமானால், கொஞ்சம் சோள மாவை அந்த ஜாடியில் சேர்த்தால் போதும்.

பாதாம் பருப்பின் தோலை எளிதில் எடுக்க வேண்டுமானால், அவற்றை வெதுவெதுப்பான சூடு காணப்படும் தண்ணீரில் ஒரு நிமிடம் ஊற வைத்த பின் முயற்சிக்கவும்.

பருப்பை வேக வைக்கும்போது சில வெந்தயம் சேர்த்தால், பருப்பு சீக்கிரம் நன்றாக வெந்து ருசியாகவும் காணப்படும். உடலுக்கும் சிறந்தது.

ரொட்டிக்கள் மற்றும் நான்களை முதல் ஒரு முறை பாதி ரோஸ்ட் செய்த பின், விருந்தாளிகளுக்கு அவற்றை பரிமாறும்போது திரும்பவும் நன்றாக சூடாக்கிக்கொள்ளலாம். இதனால் சூடாகவும் ருசியாகவும் சாப்பிடலாம்.

அரை தே‌க்கர‌ண்டி பேக்கிங் சோடாவை சப்பாத்தி பிசையும்போது சேர்த்தால், சப்பாத்தி மிகவும் மென்மையாகவும் மெல்லியதாகவும் காணப்படும்.

No comments:

Post a Comment