Wednesday, 29 January 2014

சரும‌ப் பரா‌ம‌ரி‌ப்பு ‌மிக மு‌க்‌கிய‌ம்

கண்களை சுற்றியுள்ள சரும பகுதிகளுக்கு சிறப்பு கவனம் அளிக்க வேண்டும். ஏனெனில் சருமம் பாதிப்புக்குள்ளாவது அதிகம் இந்தப் பகுதிகள் தான்.

முகத்தை கழுவும் போது, கீழிலிருந்து மேலாக கழுவவேண்டும். கிரீமோ, பவுடரோ போடும்போதோ அல்லது மேக்-அப் செய்து கொள்ளும் போதோ கிழிலிருந்து மேலாகவே தேய்க்க வேண்டும்.

நம்மில் பலர் சருமத்தை நன்றாக கழுவி சுத்தம் செய்தால், சருமம் வறண்டு விடும், அதன் ஈரப்பதத்தை எடுத்துவிடும் என்று தவறாக புரிந்து கொள்கிறோம். ஆனால், சருமத்தின் இறந்து போன செல்களை கழுவி வெளியேற்றி, அழுக்களை அகற்றினால்தான் சருமம் இளமைப் பொலிவுடன் விளங்கும்.

முகம் சுத்தம் செய்யும்போது மிருதுவான `ஜெல்' போன்றவற்றை பயன்படுத்தவும். சுடுநீரில் முகம் கழுவுவதை தவிர்க்க வேண்டும். சொறசொறப்பான பொருட்களை உபயோகித்து முகத்தை தீவிரமாக போட்டு தேய்க்ககூடாது. கிரீம் போன்ற சுத்தம் செய்யும் பொருட்களையும், பஞ்சு கொண்டு முகத்தை சுத்தம் செய்வதும் நலம்.

No comments:

Post a Comment