Monday, 27 January 2014

‌சில ஆரோ‌க்‌கிய‌த் தகவ‌ல்க‌ள்

நல்ல புரதச் சத்துகள், வைட்டமின் சத்துகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல் நம் சருமத்தை மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். டென்சனைக் குறையுங்கள். மகிழ்வோடு இருங்கள். அகத்தின் மகிழ்ச்சி முகத்தில் மட்டுமல்ல முடியிலும் தெரியும்.

வாசனைத் திரவியங்கள், பாடி ஸ்பிரே போன்றவைகளைத் தவிருங்கள். அடிக்கடி தலைவலியா? அலட்சியப்படுத்தாதீர்கள். டாக்டரிடம் காட்டுங்கள். தலைவலியால் முடி உதிர்வது நிச்சயம்.

கோகோ திடமப்பொருட்கள் அடங்கிய சாக்லெட், உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளது என்று இப்போது அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. மிகக் குறைந்த அளவில் சாப்பிடும்போதும், இதற்கு அதிகமாக புரதச்சத்துகளை அதிகரிக்கும் குணமுள்ளது. கார்போ ஹைட்ரேட்ஸ், கொழுப்புச்சத்துகள், பச்சைப் புரதச்சத்துகள் இவை தவிர சாக்லெட்டில் பெருமளவு பொட்டாஷியம், மக்னீசியம், சிறிதளவு கால்ஷியம் மற்றும் சோடியம் மேலும் வைட்டமின்கள் ஏ1, பி1, பி2, டி, இ ஆகியவையும் அடங்கியுள்ளது.

No comments:

Post a Comment