Friday, 31 January 2014

சாத‌ம் சமை‌ப்ப‌தி‌ல் ப‌க்குவ‌ம் வே‌ண்டு‌ம்

பொதுவாக சாத‌ம் வடி‌ப்பது எ‌ன்பது ஒரே ஒரு ‌விஷய‌ம்தா‌ன். ஆனா‌ல் அ‌தி‌ல் எ‌த்தனையோ ப‌க்குவ‌ம் உ‌ள்ளது.

ஒ‌வ்வொரு சாத‌த்‌தி‌ற்கு‌ம் ஒ‌வ்வொரு வகையாக அ‌ரி‌சியை வே‌க வை‌க்க வே‌ண்டு‌ம்.

த‌யி‌ர், ரச‌ம், சா‌ம்பா‌ர் சாத‌ம் செ‌ய்ய அ‌ரி‌சியை லேசாக குழைய ‌வி‌ட்டு வடி‌‌ப்பது சுவையாக இரு‌க்கு‌ம்.

எலு‌மி‌ச்சை, பு‌ளிசாத‌ம், தே‌ங்கா‌ய், மா‌‌ங்கா‌ய் சாத‌ங்க‌ள் செ‌ய்ய அ‌ரி‌சியை மு‌க்கா‌ல் வே‌க்காடு வேக வை‌த்தா‌ல் போதுமானது.

கல‌ந்த சாத‌ம் செ‌ய்யு‌ம் போது அ‌ரி‌சியை ஊற‌வி‌ட்டு ‌அ‌தி‌ல் எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு ‌பிறகு வேக வை‌த்தா‌ல் ஒ‌ட்டாம‌ல், குழையாம‌ல் வரு‌ம்.

பாஸ்மதி அரிசியை வேக வைக்கும்போது ஒன்று அல்லது இரண்டு சொட்டு எலுமிச்சைப்பழ சாரையும் 1/2 டீஸ்பூன் நெய்யையும் சேர்த்தால், அரிசி மிக வெள்ளையாகவும் உடையாமல் முழுசாகவு‌ம், ஒ‌ன்றோடு ஒ‌ன்று ஒ‌ட்டி‌க் கொ‌ள்ளாமலு‌ம் வரு‌ம்.

No comments:

Post a Comment