Friday, 21 February 2014

பிரியாணி அடிபிடிக்காமல் இருக்க

பிரியாணி செய்யும் பாத்திரத்தின் அடியில் நெய் தடவிக் கொள்ளுங்கள். ஓரு உருளைக்கிழங்கை தோல் சீவிவிட்டு, மெல்லிய வில்லைகளாக சீவிக் கொள்ளுங்கள். வில்லைகளை பாத்திரத்தின் அடியில் அடுக்கி வைத்து அதன் மேல் அரிசியை போடுங்கள். பிரியாணியும் அடிபிடிக்காது. உருளை வில்லைகளும் சாப்பிட சுவையாக இருக்கும்.

பிரிட்ஜில் வாழைப்பழத்தை அப்படியே வைத்தால் கறுப்பாகிவிடும. ஒரு கறுப்பு பைக்குள் போட்டு வைத்தால் பழம் கறுக்காமல் மஞ்சளாகவே இருக்கும்.

எலுமிச்சையிலிருந்து சொட்டு விடாமல் பிழிந்தெடுக்க, எலு‌மி‌ச்சை பழத்தை 10 நொடிகள் மைக்ரோவேவில் வைத்துப் பிறகு பிழிந்து பாருங்களேன். எ‌வ்வளவு சாறு வரு‌கிறது எ‌ன்று..

சர்க்கரை டப்பாவில் ஒரே எறும்பாக இருக்கிறதா ? நாலஞ்சு பூண்டுப் பல்லை அதில் போட்டுவைத்துப் பாருங்கள். எறும்புகள் ஓடியேப் போய்விடும்.

பூ‌ண்டை ‌விரு‌ம்பாதவ‌ர்க‌ள் ‌சில ‌கிரா‌ம்புகளை‌ப் போ‌ட்டு வை‌த்தா‌ல் போது‌ம்.

No comments:

Post a Comment