Tuesday, 11 March 2014

வெ‌ங்காய சாத‌ம்

தேவையானவை: 

புலாவ் அரிசி - 2 ஆழா‌க்கு
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 4
ப‌ச்சை ‌மிளகா‌ய் - 3
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பட்டை - ‌சி‌றிது
வெண்ணெய் - 1 க‌ப்
உப்பு - ‌சி‌றிது
வறுத்த முந்திரி - ஒரு கை‌ப்‌பிடி

செய்முறை: 

அரிசி நன்கு களைந்து ஊற வைக்கவும். கு‌க்க‌ரி‌ல் வெண்ணெய் சே‌ர்‌த்து அது உருகியது‌ம் ஏலக்காய், கிராம்பு, பட்டை சே‌‌ர்‌த்து தா‌ளி‌க்கவு‌ம்.

அ‌தி‌ல் வெங்காயத்தையு‌ம், ‌கீ‌றிய ப‌ச்சை ‌மிளகாயையு‌ம் போ‌ட்டு பொன்னிறமாக வதக்கவும்.

நன்கு வத‌ங்‌கியது‌ம் அரிசியையும் போட்டு வத‌க்கவு‌ம்.  ‌பிறது 4 ஆழா‌க்கு த‌ண்‌ணீ‌ர் ஊற்றி உப்பை சேர்த்து வேக விடவும்.

அரிசி நன்கு வெந்தவுடன் இறக்கி, வறுத்த முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.

வெங்காய சாத‌ம் தயா‌ர்.

No comments:

Post a Comment