Monday 2 January 2017

வீ‌ட்டிலேயே இரு‌க்கு இய‌ற்கையான பேஷிய‌ல்

ஒரு கப் தயிருடன், ஒரு தேக்கரண்டி எலு‌மி‌ச்சை பழச்சாரை கலந்து அதை முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் நன்றாக தடவி விடவேண்டும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து, மிருதுவான துணியிலோ, காகிதத்தாலோ அதைத் துடைத்துவிட்டு, தண்ணீரால் அலம்பி‌ ‌விட வேண்டும்.

தயிருடன் அரிசி மாவைக் கலந்து, முகத்தில் தடவி பிறகு ஒரு 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து மிதமான சுடுநீரில் கழுவிவிட்டால் முகம் நன்றாகவும் மிருதுவாகவும் ஆகிவிடும்.

தலைமுடியை நன்றாகப் பாதுகாக்கவும் சிறந்த மருந்தாக இருக்கிறது தயிர். மயிர்க்கால்கள் வரை தயிரை நன்றாக தடவி, பிறகு குளித்துவிட்டால் தலைமுடி மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தயிரைத் தலைமுடியில் தடவி, ஒரு அரைமணி நேரம் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் பொடுகுகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. தயிர், தோலை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது.

வற‌ண்ட சரும‌ம், வற‌ண்ட தலை முடியை‌க் கொ‌ண்டவ‌ர்க‌ள் இ‌ந்த முறையை தாராளமாக‌ச் செ‌ய்யலா‌ம்.

No comments:

Post a Comment