Tuesday 12 November 2013

ரச வடை

தேவையானவை:

உளுத்தம்பருப்பு - அரை கப்
உப்பு, எண்ணெய்
மல்லித்தழை, ரசத்துக்கு:
புளித் தண்ணீர் - அரை கப்
தக்காளி - 1
மஞ்சள் தூள் - ஒரு ‌சி‌‌ட்டிகை
ரச‌ப்பொடி - 2 தே‌க்கர‌ண்டி
உப்பு - ருசிக்கேற்ப
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
கடுகு, எ‌ண்ணெ‌ய், கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய் - தா‌ளி‌க்க

செய்முறை:

புளி தண்ணீ‌ரி‌ல், பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயம், ரச‌ப் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ‌‌வி‌ட்டு தா‌ளி‌த்து ரசக் கரைசலை ஊற்றுங்கள்.
ஒரு கொதி வந்ததும் இறக்கி கொ‌த்து ம‌ல்‌லி தூவு‌ங்க‌ள். உளுத்தம்பருப்பை ஊற வைத்து, உ‌ப்பு சே‌ர்‌த்து கெட்டியாக ஆட்டி எடு‌ங்கள்.

வாண‌லி‌யி‌ல் எண்ணெயைக் காய வைத்து சிறு வடைகளாக‌த் தட்டி போட்டு, வெந்ததும் எடுத்து ரசத்தில் போட்டு சூடாக பரிமாறுங்கள்.

No comments:

Post a Comment