Thursday 14 November 2013

சப்பாத்தி குறிப்புகள்

ச‌ப்பா‌த்‌தி செ‌ய்வ‌தி‌ல் எ‌த்தனையோ ‌விஷய‌ங்க‌ள் உ‌ள்ளன. அவ‌ற்றை எ‌ல்லா‌ம் படி‌த்தா‌ல் நம‌க்கு ஆ‌ச்ச‌ரியமாக இரு‌க்கு‌ம். ஒரு ச‌ப்பா‌த்‌தி‌க்கு இ‌த்தனை ‌விஷய‌ங்களா எ‌ன்று,,,

சப்பாத்தி சாப்பிடப் பிடிக்காத குழந்தைகளுக்கு சப்பாத்தி செய்து அதன் மீது சர்க்கரை, ஏலக்காய் கலந்த தேங்காய் பாலை ஊற்றி சிறிது நேரம் ஊறவைத்து பின்னர் கொடுத்துப் பாருங்கள். எப்படி பிசைந்தாலும் சப்பாத்தி இறுக்கமாக இருக்கிறதா, சப்பாத்தி மாவுடன் இரண்டு வாழைப்பழங்களை சேர்த்து பிசைந்து பாருங்கள்.

குழந்தைகளுக்கு தயாரிக்கும் சப்பாத்தியை மூடிப் போட்டு மூடி வைத்து வேக வைத்தால் பூரி போல் உப்பி வரும். மிருதுவாகவும் இருக்கும்.

பூரிக்கு மாவு பிசையும்போது மாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பூரி வெகு நேரம் மொரு மொருப்பாக இருக்கும். பூரி, சப்பாத்திக்கு மாவுப் பிசையும்போது அதனுடன் இரண்டு கைப்பிடி அளவு கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி நிறமாகவும், மணமாகவும் இருக்கும். 

No comments:

Post a Comment