Monday 24 February 2014

மோ‌ர் பு‌ளி‌த்து‌ப் போ‌கிறதா

மோர், தயிர் போன்றவை சீக்கிரமே புளித்துப் போகிறதா... பிரச்சனை மோர் தயிரில் இல்லைங்க. அவற்றை வைக்கும் பாத்திரத்தில் தான். கண்ணாடி, மண்பாண்டங்களில் வைத்தீர்களானால் சீக்கிரம் புளிக்காது.

முருங்கைப்பூ, இலைகளை சாத வகைகள், சைவ அயிட்டங்கள் போன்றவை செய்யும் போது அலங்கரிக்க பயன்படுத்திப்பாருங்கள். அதே போல் காய்கறிகளை சூப்புக்காக வேக வைக்கும் போது அதனுடன் இதனையும் சேர்த்து வேக வைத்துப் பாருங்கள், வித்தியாசமான மணத்துடன் சூப்பராக இருக்கும். உடலு‌க்கு‌ம் ந‌ல்லது.

முருங்கைக்காய், உருளைக்கிழங்கு சப்ஜி நிறைய செய்து விட்டீர்களா? கவலையேபடாதீர்கள். சிறிது தண்ணீர் சேர்த்து, சிறிது மசாலா சேர்த்து, சாதத்திற்கு சாம்பாராக்கி விடுங்கள். தேவையான அளவு உப்பு சேர்க்க மறந்து விடாதீர்கள்.

முருங்கைக்காயை நறுக்கி பிளாஸ்டிக் கவரில் சிறு துளைகள் போட்டு, பிரிஜ்ஜில் வைக்கவும். முருங்கைக்காய் 8 முதல் 10 நாள் வரை அப்படியே இருக்கும்.

No comments:

Post a Comment