Friday, 28 February 2014

சமை‌‌க்கு‌ம் போது கவ‌னி‌க்க

பொதுவாக திராட்சையில் சாறு எடுத்தப் பின்னர் அதன் சக்கையை தூர எறிவார்கள். அவ்வாறு செய்யாமல் திராட்சை சக்கையை ஜாம் தயாரிக்க பயன்படுத்தலாம்.

வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.

ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளை பயன்படுத்தக்கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.

கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.

வெங்காயத்தை தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீர் வராது.

No comments:

Post a Comment