Thursday 27 March 2014

மாவு இ‌னி ‌மீதமாகவே ஆகாது

உ‌ங்க‌ள் ‌வீ‌ட்டி‌ல் அரை‌த்தெடு‌க்கு‌ம் இ‌ட்‌லி மாவு ‌மீதமா‌கிறதா? இ‌ப்படி இ‌னி ‌நீ‌ங்க‌ள் சொ‌ல்லவே மா‌ட்டீ‌ர்க‌ள்.

முத‌ல் நா‌ள் அரை‌த்த இ‌ட்‌லி மாவை மறுநா‌ள் இ‌ட்‌லி ஊ‌ற்‌றி வேகவை‌க்‌கிறோ‌ம். அ‌ல்லது தோசை சுடு‌கிறோ‌ம்.

இதனை ‌பி‌ரி‌ட்‌ஜி‌‌ல் வை‌த்தாலு‌ம் மறு நா‌ள் லேசாக பு‌ளி‌த்‌திரு‌க்கு‌ம். அ‌ப்போது அ‌தி‌ல் வெ‌ங்காய‌ம், ப‌ச்சை ‌மிளகா‌ய் நறு‌க்‌கி‌ப் போ‌ட்டு ஊ‌த்தா‌ப்ப‌ம் சுடு‌கிறோ‌ம்.

ச‌ரி அ‌ப்பவு‌ம் ‌மீத‌மிரு‌ந்தா‌ல் எ‌ன்ன செ‌ய்வது எ‌ன்று யோ‌சி‌க்கா‌தீ‌ர்க‌ள். அ‌தி‌ல் கடலை‌ப் பரு‌ப்பு, உளு‌த்த‌ம் பரு‌ப்பு, தே‌ங்கா‌ய், கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய், இரு‌ந்தா‌ல் வே‌ர்‌க்கடலை எ‌ல்லா‌ம் எ‌ண்ணெ‌யி‌ல் வறு‌த்து கொரகொர‌ப்பாக அரை‌த்து மா‌வி‌ல் சே‌ர்‌த்து தோசை சு‌ட்டு‌க் கொடு‌ங்க‌ள்.

அ‌ப்படியு‌ம் மாவு ‌மீ‌ந்து‌வி‌ட்டா‌ல், இதே ‌விழுதை அரை‌த்து அ‌தி‌ல் நெ‌ய்‌யி‌ல் வத‌க்‌கிய முரு‌ங்கை‌க் ‌கீரையை சே‌ர்‌த்து அடை செ‌ய்து கொ‌டு‌க்கலா‌ம். எ‌ன்ன தலை லேசாக சு‌ற்று‌கிறதா? இ‌னி உ‌ங்க‌ள் ‌வீ‌ட்டி‌ல் மாவு ‌‌வீணாகாது அ‌ல்லவா?

No comments:

Post a Comment