Sunday, 2 March 2014

குறைவாக உ‌ட்கொ‌ண்டா‌ல் ஆப‌த்து

உடலு‌க்கு‌த் தேவையான அள‌வு உணவு உ‌ண்ண வே‌ண்டியது அவ‌சிய‌ம். செ‌ய்யு‌ம் வேலை‌க்கு ஏ‌ற்றா‌ற் போல தகு‌ந்த ஆகார‌த்தை உ‌ட்கொ‌ண்டா‌ல்தா‌ன் ஆரோ‌க்‌கியமாக வாழ முடியு‌ம்.

எடு‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டிய சராச‌ரி உண‌வி‌ன் அளவை‌விட குறைவான அள‌வி‌ல் உணவை எடு‌த்து‌க் கொ‌ண்டா‌ல் இரு‌ம்பு‌ச் ச‌த்து, கா‌ல்‌சிய‌ம் ச‌த்து குறைபாடு ஏ‌ற்படு‌ம்.

அதாவது, உட‌லி‌ல் இரு‌க்க வே‌ண்டிய இரு‌ம்பு‌ச் ச‌த்து ம‌ற்று‌ம் கா‌ல்‌சிய‌த்‌தி‌ன் அளவு குறை‌ந்து, அதே சமய‌த்‌தி‌ல் அத‌ன் தேவை அ‌திகமாக இரு‌க்கு‌ம்போது ப‌ல்வேறு ‌பிர‌‌ச்‌சினைக‌ள் ஏ‌ற்படு‌ம்.

பெ‌ண்களு‌க்கு மாத‌வில‌க்கு சமய‌த்‌தி‌ல் இரு‌ம்பு‌ச் ச‌த்‌தி‌ன் தேவை இர‌ட்டி‌ப்பாக உயரு‌ம். ஆனா‌ல் அத‌ற்கே‌ற்றா‌‌ற் போல இரு‌ம்பு‌ச் ச‌த்து இ‌ல்லாம‌ல் போனா‌ல் ர‌த்த சோகை ஏ‌ற்படு‌ம்.

கா‌ல்‌சிய‌ம் ச‌த்து குறைபாடு ஏ‌ற்ப‌ட்டா‌ல் வா‌ழ்‌வி‌ன் ‌பி‌ற்பகு‌தி‌யி‌ல் எலு‌ம்பானது வ‌லிமை குறை‌ந்து போகு‌ம். அது உட‌லி‌ல் எடையை‌த் தா‌ங்க முடியாம‌ல் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம்.

No comments:

Post a Comment