Wednesday 18 May 2016

சாக்லெட் கேக்

தேவையானவை:
  • டேப்லெட் சாக்லெட் - 200 கிராம்
  • மைதா - 200 கிராம்
  • சீனி - 100 கிராம், வெண்ணெய் - 100 கிராம்
  • முட்டை - 3
  • பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
  • ஐஸிங் செய்ய:
  • ஐஸிங் சுகர் - 125 கிராம்
  • வெண்ணெய் - 10 கிராம்
  • நியூடெல்லா - 2 தேக்கரண்டி

செய்முறை:
  • தேவையானவற்றை தயாராக வைக்கவும். வெண்ணெய், சாக்லெட் இரண்டையும் உருக்கிக் கொள்ளவும். முட்டை, சீனியை நன்கு கலக்கவும். உருக்கிய வெண்ணெய், சாக்லெட் கலவையை, முட்டை, சீனி கலவையுடன் ஒன்றாக சேர்த்து கலக்கவும். அதனுடன் மைதா, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு அடிக்கவும்.
  • வெண்ணெய் தடவிய கேக் ட்ரேயில் ஊற்றவும். 200 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 20 நிமிடம் வரை வேக வைக்கவும். ஆறிய பின்பு கேக் ட்ரேயை விட்டு தனியே எடுக்கவும். ஐஸிங் சுகர், வெண்ணெய் சேர்த்து பீட்டரால் கலக்கவும். தேவையானபடி ஐஸிங்கை பிரித்து விரும்பிய நிறங்கள் சேர்த்து குழைக்கவும்.
  • கேக் ஆறியதும், நியூடெல்லா தடவி, கலந்து வைத்துள்ள ஐஸிங் கொண்டு விரும்பியவாறு அலங்கரிக்கவும்.

No comments:

Post a Comment