Wednesday 14 June 2017

மாங்காய் ஊறுகாய்


செய்ய தேவையான பொருட்கள்:
பச்சை மாங்காய் - 8 துண்டுகள்
மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 2 கப்


செய்முறை:
முதலில் மாங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின் அதனை ஒரு ஜாடியில் போட்டு, உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் போட்டு தாளிக்க வேண்டும்.
பின்பு அதனை நறுக்கிய மாங்காய் துண்டுகளுடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
வேண்டுமெனில் அத்துடன் தேவையான அளவு எண்ணெயை ஊற்றிக் கொண்டு, பின் அதனை ஒரு காட்டன் துணியால் காற்று புகாதவாறு நன்கு இறுக்கமாக கட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு அந்த பாட்டிலை ஒரு வாரத்திற்கு தினமும் இரண்டு முறை குலுக்க வேண்டும். ஒரு வாரம் ஆன பின்பு, அந்த பாட்டிலை 2 வாரத்திற்கு வெயிலில் தினமும் 5-6 மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்யும் போது மாங்காய் துண்டுகள் மென்மையாவதோடு, ஊறுகாயின் நிறமும் மாறிவிடும்.
இப்போது சுவையான மாங்காய் ஊறுகாய் ரெடி!!! வேண்டுமென்றால் தினமும் இந்த மாங்காய் ஊறுகாயை வெயிலில் வைத்து எடுத்தால், ஊறுகாய் நன்கு சுவையோடு நீண்ட நாட்கள் இருக்கும்.

No comments:

Post a Comment