எந்த உணவையும் வீணாக்காமல், சாப்பிடுபவர்களுக்கும் தெரியாமல் எந்த உணவையும் புதிதாக்கி பரிமாறலாம். அது கெட்டுப் போகாமல் இருக்கும் வரை.
ரசம் நேற்று இரவு தான் வைத்தது. பழையது என்று காட்டிக் கொடுக்காமல் இருக்க, வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய், கறிவேப்பிலைப் போட்டுத் தாளித்து ரசத்தில் ஊற்றி விடுங்கள். போதும்.
சமைத்த சாதம் மீதமாகிவிட்டது. சாப்பாட்டு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு எப்போதும் போல வடித்து விடுங்கள். சாதம் சூடாக இருக்கும்.
காரக் குழம்பை புதிதாகவும் ருசியாகவும் மாற்றலாம், இரவு வைத்த காரக் குழம்பில் தேங்காயை மசித்து பால் எடுத்து குழம்பில் ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கிப் பரிமாறுங்கள்.
காலையில் சுட்ட இட்லியை சாப்பிட வேண்டும் என்றால், சாப்பிடும் போது இட்லி தட்டுகளில் இட்லியை அடுக்கி ஒரு 5 நிமிடம் வேக விட்டு இறக்கி எடுத்துக் கொள்ளுங்கள். புதிய இட்லி போல இருக்கும்.

No comments:
Post a Comment