Sunday, 26 January 2014

கறு கறு கூ‌ந்த‌ல் பெற வே‌ண்டுமா

கறுகறு கூந்தல் பெற, சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் கறி வேப்பிலைத் துளிர் சேர்த்து கொதிக்க வைத்து கூந்தலில் தடவிக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு முறை எண்ணெய் தடவும்போதும் மண்டை ஓட்டுப் பகுதித் தோலை விரல் நுனியால் மசாஜ் செய்யத் தவறாதீர்கள்.

ஷாம்பூ, சோப்பு வகைகளுக்கு `டாட்டா' சொல்லுங்கள். அதற்குப் பதில் சிகைக்காய், அரப்பு, பாசிப்பருப்பு மாவு போன்ற இயற்கையானவற்றைத் தேர்ந்தெடுங்கள்.

உணவில் கீரை, முளைக்கட்டிய பயறு வகைகள், உலர் திராட்சை, பேரீட்சை போன்றவைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இரவில் பால் குடிப்பதை மறக்க வேண்டாம். கூந்தலில் அழுக்கு, சிக்கு சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

எப்போதும் சுத்தமான நீரிலேயே கூந்தலை கழுவ வேண்டியது அவசியம். குளிர்ந்த அல்லது இளம் சூடான தண்ணீரையே பயன்படுத்துங்கள்.

No comments:

Post a Comment