Tuesday, 28 January 2014

முக‌த்‌தி‌ற்கு‌ம் ப‌யி‌ற்‌சி அவ‌சிய‌ம்

முகத்திற்கென்றே சில பிரத்யேகமான பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். உதாரணமாக கன்னத்தை நன்றாக உப்பச்செய்து பிறகு மெதுவாக உட்புறமாக காற்றை இழுத்துக் கொள்ளுதல் போன்ற பயிற்சிகள், கண்களை நன்றாக அகலத்திறந்து பிறகு இறுக்கமாக மூடுதல் போன்ற பயிற்சிகள், முகத்தசைகளை நன்றாகச் செய்ய உதவும்.

அதிகச் சூடு, வெயில், அதிகக் காற்று, தூசி போன்றவற்றிலிருந்து நாம் நம் உடம்பின் மேற்பகுதிகளை பாதுகாக்க வேண்டும். இது நம் சருமத்தின் ஈரப்பதத்தை காய்ந்து போகச் செய்யும். சருமத்தை ஈரப்பதமாக்க உபயோகிக்கும் பொருட்களை, தட்பவெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் பசை உள்ள பொருட்கள் குளிர் காலத்திலும், எண்ணெய் பசை இல்லாத பொருட்கள் கோடை காலங்களிலும் பயன்படுத்த வேண்டும்.

சருமத்தில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு காரணம் இந்த சூரிய வெப்பமே. சன்-ஸ்கிரீன் லோஷன்களை தினமும் ஒரு வருடத்திற்கு பயன்படுத்த வேண்டும். சூரியக் கதிர்களின் தோல் பாதிக்கும் வெப்பக் கதிர்கள் கோடைகாலத்தை விட குளிர்காலத்திலேயே அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும், ஆகவே சன்-ஸ்க்ரீன் லோஷன்களை வருடம் முழுவதும் பயன்படுத்துங்கள்.

No comments:

Post a Comment