இட்லி மாவை தண்ணியா அரைச்சிட்டீங்களா? கவலையை விடுங்க. கொஞ்சம் சோள மாவு, கொஞ்சம் பிரட் துணுக்குகள். இரண்டையும் மாவில் சேருங்க. மாவு கெட்டியாகும். இட்லி சுவையாகும்.
சான்விட்ச் செய்யும்போது பிரட் ஓரங்களை தூக்கி எறிஞ்சிடாதீங்க. அவற்றை சின்ன சின்னதா கட் பண்ணி நல்லா பொரிச்சு எடுத்துக்குங்க. இதை சூப்பிலோ அல்லது சாலடிலோ சேருங்கள். வித்தியாசமாக இருக்கும்.
கடையில் செய்வது போல் மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு செய்ய விரும்புகிறீர்களா அப்படியானால்..
உருளைக் கிழங்கை தோல் சீவி ஒரே அளவில் கட் பண்ணிக்குங்க. லேசான வென்னீரில் கொஞ்சம் உப்பை போட்டு அதில் கிழங்குத் துண்டுகளை 3 நிமிஷம் ஊறவையுங்க. அப்புறம் தண்ணியை வடிச்சிட்டு கிழங்கை வறுத்துப் பாருங்க.
மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வறுவல் எப்படி இருக்கும் என்று தெரியும்.
No comments:
Post a Comment