Tuesday, 18 February 2014

து‌ர்நா‌‌ற்ற‌த்‌தி‌ற்கு ‌விடை கொடு‌ங்க‌ள்

எ‌வ்வளவுதா‌ன் ‌நீ‌ங்க‌‌ள் அழகாக அல‌ங்க‌ரி‌த்து‌க் கொ‌ண்டா‌லு‌ம், உ‌ங்க‌ள் ‌மீது ‌விய‌ர்வை நா‌ற்ற‌ம் வ‌ந்தா‌ல் எ‌‌ப்படி இரு‌க்கு‌ம். எனவே ‌விய‌ர்வை நா‌ற்ற‌த்‌தி‌ற்கு ஒரு முடிவு எடு‌ப்போ‌ம்.

உட‌ல் சூடு அதிகமானால் உடல் தன்னை தானே குளிர வைக்கும் முறைதான் வியர்வை. அதனால் தண்ணீரை அதிக அளவில் குடிப்பதால், உடலை குளிர்ந்த நிலையில் வைக்கலாம்.

கடுமையான வெ‌யி‌லி‌ல் வெ‌ளி‌யி‌ல் அலைவதை‌த் த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம். ‌நி‌ச்சயமாக செ‌ல்ல வ‌ே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் குடை போ‌ன்றவ‌ற்றை கை‌யி‌ல் வை‌த்‌திரு‌க்கவு‌ம்.

கோடை கால‌ங்க‌ளி‌ல் அ‌திகமாக மோ‌ர் போ‌ன்றவ‌ற்றை அரு‌ந்‌தி‌வி‌ட்டு வெ‌ளி‌யி‌ல் செ‌ல்லலா‌ம். அத‌ற்காக கு‌ளி‌ர் பான‌ங்களை குடி‌க்க வே‌ண்டா‌ம்.

கவலைப்படுவதும், உடல் துர்நாற்றத்திற்கு காரணமாகலாம். மனதை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும், வைத்திருப்பதும் துர்நாற்றத்தை முறியடிக்க உதவும்.

No comments:

Post a Comment