Saturday, 22 February 2014

அ‌தி‌விரைவான சமையலு‌க்கு

நிறைய டிஷ்ஷூக்கு வெங்காயம் தேவைப்படும். தீடிரென செய்ய வேண்டும் என்றால், வெங்காயத்தை நறுக்குவது பெரும்பாடாக இருக்கும். அதனால் நேரம் கிடைக்கும் போது வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது இன்ஸ்டன்டாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆப்பிள், வெள்ளரிக்காயின் தோல்களை தூக்கி எறியாமல், சாலட்டை அலங்கரிக்கும் போது, அவற்றை பயன்படுத்துங்கள். பார்க்க மிக மிக அழகாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் ஆப்பிளின் தோலில் எவ்வளவு சத்து இருக்கிறது தெரியுமா?

கோடைக்காலங்களில் தயிர் சாதம் புளிப்பு ஏறாமல் இருக்க, சமையல் சாதத்தில் புதிதான தயிரை சேர்த்து, குக்கரில் ஒரு விசில் வரும் வரையில் வைக்கவும், 2 நாட்கள் வரையிலும் தயிர் சாதம் புளிக்காது.

பாலாடை அல்லது சீஸ் உருகாமலும் கெடாமலும் இருக்க வினீகரில் நனைத்த துணியில் சீஸை சுற்றி அதனை நன்கு இறுக மூடிய பாத்திரத்தில் வைக்கவும்.

No comments:

Post a Comment