Sunday, 23 February 2014

இதெ‌ல்லா‌ம் சே‌ர்‌த்து‌‌ப் பாரு‌ங்க‌ள்

சமோசாக்கள் தயாரிக்கும்போது கோதுமை மாவுடன் அல்லது மைதா மாவுடன் அரிசி மாவைச் சேர்‌த்தா‌ல் மொறுமொறு‌ப்பான சமோசா‌க் ‌கிடை‌க்கு‌ம்.

ஒரு டவலை தண்ணீரில் நனைத்து அதை சமையலறையில் காயவிடுங்கள. எல்லாவிதமான சமையல் வாசனைகளையும் அது உறிஞ்சிக் கொண்டுவிடும். சமையலயறை‌யி‌ல் எ‌ந்த வாசனையு‌ம் த‌ங்காது.

ஆம்லெட்டுக்கு முட்டை அடிக்கும்போது, கொஞ்சம் பாலை சேர்த்துக்கொள்ளுங்கள். ஆம்லெட் மெத்து மெத்தென்று இருக்கும்.

கோதுமை மாவை அரை‌க்கு‌ம் போது அ‌தி‌ல் ஒரு கை‌ப்‌பிடி சோயா வா‌ங்‌கி சே‌ர்‌த்து அரை‌த்தா‌ல் ச‌ப்பா‌த்‌தி ‌மிருதுவாக இரு‌க்கு‌ம். உடலு‌க்கு‌ம் ந‌ல்லது.

சாத‌ம் வடி‌க்கு‌ம் போது அ‌தி‌ல் ‌சி‌றிது உ‌ப்பு சே‌ர்‌த்து வடியு‌ங்க‌ள். எ‌வ்வளவுதா‌ன் குழ‌ம்‌பி‌ல் உ‌ப்பு போ‌ட்டாலு‌ம் சாத‌த்‌தி‌ல் உ‌ப்பு இரு‌ந்தா‌ல் அத‌ன் ரு‌சியே த‌னிதா‌ன்.

No comments:

Post a Comment