Thursday, 20 February 2014

கு‌க்க‌ரி‌ல் தக்காளி சாத‌ம்

தேவையானவை: 

பச்சரிசி - 1 கப், த‌க்கா‌ளி - 10 (நறு‌க்‌கியது)
வெங்காயம் (நறு‌க்‌கியது) - 2
பூண்டு - 6 பல், பச்சை மிளகாய் - 4
கடலைப் பருப்பு - 1 தே‌க்கர‌ண்டி
கடுகு - 1/4 தே‌க்கர‌ண்டி
மஞ்சள்தூள் - சிறிதளவு
‌மிளகா‌ய் தூ‌‌ள், எண்ணெய் - 3 தே‌க்கர‌ண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

செ‌ய்யு‌ம் முறை

அரிசியைக் களைந்து ஒரு கப் தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். கு‌க்க‌ரி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி கடுகு, கடலைப் பருப்பு ஆகியவற்றைப் போட்டு தா‌ளி‌க்கவு‌ம்.  இதில் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போ‌ட்டு வத‌க்கவு‌ம். ‌பிறகு த‌க்கா‌‌ளி போ‌ட்டு வத‌க்கவு‌ம்.

அ‌தி‌ல் மஞ்சள்தூள், உப்பு, ‌மிளகா‌ய் தூ‌ள் ஆகியவற்றைப் போட்டு ந‌ன்கு கல‌க்‌கி ‌விடவு‌ம்.  இ‌தி‌ல் அ‌ரி‌சியை‌ப் போ‌ட்டு 2 க‌ப் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கு‌க்கரை‌ மூடவு‌ம்.

1 ‌விசி‌லி‌ல் இற‌க்‌கி கொ‌த்தும‌ல்‌லி, க‌றிவே‌ப்‌பிலை‌த் தூ‌வி ப‌ரிமாறவு‌ம்.

No comments:

Post a Comment